பேருந்தில் 3 பவுன் தங்க நகையை தவறவிட்ட மூதாட்டி… நேர்மையுடன் ஒப்படைத்த இளம் பெண்..!

Spread the love
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே தாமரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொட்டிச்சி அம்மா(53). இவரது மகள் திருமணமானகி சிப்காட் அருகே மாணிக்கம் பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தொட்டிச்சி அம்மா, தனது மகளுக்காக மூன்று பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ரூபாயுடன் புதுக்கோட்டை வந்துள்ளார்.
புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் நோக்கி செல்ல இருந்த தனியார் பேருந்தில் மாணிக்கம் பட்டி செல்ல மூதாட்டி பேருந்தில் அமர்ந்துள்ளார். அப்போது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக பேருந்து இருக்கையில் அருகில் அமர்ந்திருந்த புதுக்கோட்டை ஐடிஐ காலனியைச் சேர்ந்த இளம் பெண்ண் ஷாலினியிடம்(23) தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்த மஞ்ச பையை கொடுத்து விட்டு இறங்கியுள்ளார்.
அப்போது பேருந்து புறப்பட்ட போது தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பிய மூதாட்டி பேருந்து அங்கிருந்து கிளம்பி இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியுடன் சென்று தேடிப் பார்த்துள்ளனர் அப்போது மூதாட்டியை காணவில்லை என்று அந்த பெண் பையுடன் பேருந்து நின்ற இடத்தில் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது பையை கொடுத்துச் சென்ற இந்த அம்மாவை காணவில்லை என்று பையுடன் கீழே இறங்கி தேடியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து நகை மற்றும் ரொக்க பணத்துடன் உள்ள பையை மூதாட்டி இடம் பத்திரமாக காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து நகை மற்றும் ரொக்க பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த இளம் பெண் ஷாலினிக்கு காவல்துறையினர் மற்றும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

About Author

Related Posts

தாம்பத்தியம் என்றால் என்ன.? கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டு.!

Spread the love

Spread the love தாம்பத்தியம்_என்பது வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..! மனைவி வந்து கேட்பாள்:”என்ன சாப்பிட்றீங்க?இட்லியா..?தோசையா…

தோழி விடுதிகள்- மகளிர்க்கான முகவரி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

Spread the love

Spread the loveமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறிஇருப்பதாவது:- தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்…

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அறிவிப்பு

Spread the love

Spread the loveவருடம் தோறும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பொழிந்து, குளுமையான சீசன் நிலவுவது வழக்கம். அந்த ரம்மியமான சூழலை ரசிப்பதற்கென்றே மக்கள் கூட்டம் அங்கு செல்வார்கள்….

கடும் உணவு பஞ்சத்தில் ஆப்கானிஸ்தான். கை கொடுத்து உதவிய இந்தியா

Spread the love

Spread the loveஉணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது என ஐ.நா. உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக…

கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகள்.!

Spread the love

Spread the loveஆப்பிள் இதிலுள்ள நீர்ம நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் சி யும் இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஒரு தெம்பை தருகிறது. மேலும் ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான 14 சதவீத…

வீணாக தூக்கி போடும் பொருட்களை வைத்து வீடு மூழுக்க நறுமணத்தை உண்டாக்கலாம் என்னா பொருள் தெரியுமா?

Spread the love

Spread the loveவீட்டில் பயன்படுத்தும் பல பொருட்களில் அதன் பயன்பாடு முடிந்த பிறகு அதை வேறொரு பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். எப்படி நாம் சமைக்க பயன்படுத்திய காய்கறிகளின் கழிவுகள் ஒரு நல்ல உரமாக பயன்படுகிறதல்லவா, அதே போல் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *