நடிகை கஸ்தூரிக்கு 1991ம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே படம் தான் முதல் படமாகும். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இவர் அறிமுகமான முதல் ஆண்டிலேயே இவரது நடிப்பில் 3 படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னவர், செந்தமிழ் பாட்டு, இந்தியன் உள்ளிட்ட இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியடைந்துள்ளன.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் படித்து முடிந்த பிறகு, 1992இல் மிஸ் சென்னை அழகி போட்டியில் பட்டம் வென்றார். அதே ஆண்டு ஃபெமினா மிஸ் மெட்ராஸ் பியூட்டி பேஜன்ட் பட்டத்தையும் வென்றார்.
சினிமாவில் ஆர்வம் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்தார். அவர் நினைத்தது போல, திரைத்துறையிலும் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.
அரசியல் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்வார். இது பல முறை சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. இருப்பினும், தான் கொண்ட கருத்தில் விடாப்பிடியாக இருப்பார் நடிகை கஸ்தூரி.
தொடர்ந்து அவ்வப்போது இளசுகளையும் குஷிப்படுத்தி வருகிறார். சில ஹாட்டான வீடியோக்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சேலையில் தனது கட்டழகை காட்டிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் நிஜமான நாட்டுக்கட்ட என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்
Video Link
https://www.instagram.com/p/C0WC04tPZmP/