தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைவருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
40 வயதை நெருங்கும் திரிஷா, இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொண்டதால், அடுத்து உங்களுக்கு எப்போ கல்யாணம் என ரசிகர்கள் திரிஷாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதன் காரணமாக விரைவில் திருமண செய்தியை நடிகை திரிஷா வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை த்ரிஷாவின் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.